மதுரை மாவட்டம் திருநகரில் இன்று (அக். 30) இரவு எட்டு மணி அளவில் மிதமான மழை பெய்ய தொடங்கியது. இதனால் திருநகர் பஜார் பகுதியான 3வது ஸ்டாப் பகுதியில் தீபாவளி வியாபாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. வீட்டு உபயோக பொருள்கள் வாங்க வந்த மக்கள் மழையால் கலைந்து சென்றனர். இந்த மழையால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர். மழையானது சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.