மதுரை: போக போகத்தான் தெரியும். சீமான் பேட்டி.

72பார்த்தது
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (அக். 26) மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தவெக மாநாட்டில் தமிழ் மன்னர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கட்டவுட் குறித்த கேள்விக்கு?

அதையெல்லாம் எடுத்துவிட்டு பின்னர் மராட்டியர்கள் படத்தையா  வைக்க வேண்டும், நான் வரவேற்கிறேன். இதைத்தானே வைக்க வேண்டும் நான் வைக்கும் போது என்னிடம் யாரும் கேட்கவில்லை. பெருமைமிகு முன்னோர்கள் இருக்கிறார்கள் அரசியல் தலைமைகள் உள்ளனர். அதை செய்யும்போது பெருமைதான்.

விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார் என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு?

தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது போக போகத்தான் தெரியும் நீங்கள் பெரியாருக்கு மாலை போடும் போது அதை சொல்லவில்லையே. அது அவரது கடமை நான் சேர, சோழ, பாண்டியர் பரம்பரையில் வந்தவன் நான் என் முன்னோரை போற்ற வேண்டும். சுபாஷ் சந்திர போஸுக்கு இங்கே பெயரோ, சிலையோ இல்லாமல் இருக்கிறதா அதை கொண்டு வந்தவர் எங்க தாத்தா முத்துராமலிங்க தேவர் ஆனால் மேற்கு வங்கத்திலோ, வட இந்தியாவிலும் அவருக்கு பெயரோ, சிலையோ உண்டா நீங்கள் சொல்லுங்கள் அப்ப நாங்க சுதந்திரத்துக்கு போராடாமல் வேற எதுக்கு போராடினோமா, எதுக்கு நாங்கள் நிராகரிக்கப்பட்டோமோ அங்கே எழுந்து நிற்க வேண்டும். அதற்கு அவசியம் இருக்கு என்றார்.
தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி