மதுரை நகரம் - Madurai City

மதுரை: மரங்களை ஜேசிபி கொண்டு அகற்றக்கூடாது: வனக்கோட்டம் உத்தரவு

மதுரை: மரங்களை ஜேசிபி கொண்டு அகற்றக்கூடாது: வனக்கோட்டம் உத்தரவு

மதுரை பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார் சாலை விரிவாக்கம் மற்றும் அரசு பணிகளுக்காக மரங்களை வெட்டும்போது ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி மரங்களைச் சேதப்படுத்துகின்றனர் என முதல்வர் கட்டுப்பாட்டறைக்கு புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் மதுரையை வனக்கோட்ட வன அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் வன அலுவலர் இது குறித்து பதில் அளித்துள்ளார். அதில் மதுரை வனக்கோட்டம் அலுவலர் தருண்குமார் பதில் கடிதத்தில் இனிவரும் காலங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் அரசு பணிகளின் போது மரக்கிளைகளை அகற்றும்போது மரங்களைச் சேதப்படுத்தாமல் அறுவை இயந்திரம் மூலம் கிளைகள் மட்டும் அப்புறப்படுத்த மற்ற துறைகளுக்கு வருகிற மாவட்ட பசுமை கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా