மதுரையில் என்கவுண்டரில் உயிரிழந்த சுபாஸ் சந்திரபோஸின் உடலை மாஜிஸ்திரேட் பாக்கியராஜ் உடற்கூராய்வு அறையில் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து சுபாஸின் உடலானது முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டு பின்னர் உடற்கூராய்வு தொடங்கியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுபாஸ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன்,
தனது மகன் வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமினில் வந்து கையழுத்திட்டு வந்தால் அப்போது கிளாமர் காளி கொலை நடந்துவிட்டதால் வெளியில் வந்தால் கிளாமர்காளி கொலை வழக்கில் கைது செய்துவிடுவார்கள் என உளவுத்துறை காவலர் கூறியதால் வெளியூரில் இருந்தார்.
ஆனால் திட்டமிட்டு் தனது மகனை வேறு இடத்தில் கொன்றுவிட்டு மதுரையில் என்கவுண்டர் என்பது போல காவல்துறையினர் திட்டம் தீட்டிவிட்டனர் எனவும், உரிய விசாரணை முடியும் வரை உடலை பெறமாட்டோம் என்றார்.
காவல்துறையினர் உறவினர்களான எங்கள் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தி வருகிறது என்றார். சுபாஸ் சந்திரபோஸ் திருந்தி வாழ்வதாக காவல்துறையினரிடம் தெரிவித்த நிலையில் திருமண ஏற்பாடுகள் செய்தோம், சுபாஸ் சந்திரபோஸை என்கவுண்டர் செய்துவிட்டதாக தெரிவித்தார்.
தனது மகன் தவறே செய்திருந்தாலும் காலில் சுட்டிருக்கலாம் எதற்காக கொல்ல வேண்டும், திட்டமிட்டு எனது மகனை காவல்துறையினர் கொலை செய்துவிட்டனர் என குடும்பத்தினரும் குற்றம் சாட்டினர்.