மதுரை: வக்பு வாரிய திருத்த சட்டம்..மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

50பார்த்தது
நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை முன்மொழிந்து இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக முன்மொழிந்து இருக்கின்றனர். அதனையும் மீறி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக, இஸ்லாமியருக்கு எதிராக இந்த வக்ஃப் வாரிய திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 

தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தாலும் இந்த திருத்த சட்டத்திற்கு எதிராக தான் வாக்களிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனித்தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது. மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு இந்த தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்நேரமும் துணை நிற்கும். மேலும் இது தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் உள்ளது அதனை உடனடியாக விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்தி