சித்திரை திருவிழா பணிகள்;முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்

74பார்த்தது
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது மிகவும் பிரசிதிபெற்றதாகும். 15நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான பணிகள் தொடங்கும் வகையில் மீனாட்சியம்மன் கோவில் சார்பில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து யானை முன்செல்ல முகூர்த்தக்கால் ஊர்வலமாக எடுத்து தேரடிக்கு கொண்டுவரப்பட்டு சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தகால் நடப்பட்டது. இதனை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபத்திலும் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவானது ஏப்ரல் 29 - சித்திரை திருவிழா கொடியேற்றம், மே 06 - மீனாட்சி பட்டாபிஷேகம், மே 08 -மீனாட்சி திருக்கல்யாணம், மே 09 -மீனாட்சி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.


முகூர்த்தக்கால் நடப்பட்ட நிலையில் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கியது. இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் மே 10 - கள்ளழகர் புறப்பாடு, மே 11 - கள்ளழகர் எதிர்சேவைஔ மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடைபெறவுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி