மதுரை: ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டு பாசிசத்தை வீழ்த்துவோம்

81பார்த்தது
மதுரை: ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டு பாசிசத்தை வீழ்த்துவோம்
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு ஏப். 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் 3-வது நாளான நேற்று 'கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை' என்னும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியகையில்: 'வக்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். இந்த சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். நீதிமன்றத்திலும் வழக்கு தொடரவுள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தின் முதல் வரியே பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்பது தான். அதனால் தான் ஒன்றிய அரசு என்கிறோம். 

சட்டத்தில் இல்லாததை கூறவில்லை. இதையே அவர்களால் தாங்க முடியவில்லை. மாநில சுயாட்சி எங்கள் உயிர் கொள்கை. கூட்டாட்சிக்கு எதிரான பாசிச அரசாக மத்திய அரசு இருக்கிறது. மோடியின் ஆட்சி தான் மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், மொழி, தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தி ஆக வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சுயாட்சி காப்பாற்றப்படும். பாஜக ஆட்சியின் முடிவில் தான் இந்தியாவின் கூட்டாட்சி மலரும். அதற்காக இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவோம். இணைந்து போராடி பாசிசத்தை வீழ்த்துவோம்,' என்று முதல்வர் பேசினார்.

தொடர்புடைய செய்தி