பேரூராட்சி அலுவலகம் முன்பு விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

12 ஆவது வார்டு பூவம்பாடியை மறுசுழற்சி அடிப்படையில் தனி (SC) வார்டாக மாற்றிடவும், பேரூராட்சியில் பூவம்பாடி, லட்சுமணம்பட்டி ஆகிய ஊர்களில் பட்டியலின மக்களுக்கு சுடுகாட்டு பாதை மற்றும் மயான கொட்டகை கட்டித்தர வலியுறுத்தியும், அம்ருத் 2. 0 திட்டத்தில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல் நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து தரமான முறையில் கட்டி பொது குடிநீர் வழங்கிட வலியுறுத்தியும், பேரூராட்சி முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா அமைத்திடவும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். பூவை. பிரசாந்த் வரவேற்புரையாற்றினார். கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் மகாமுனி முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், மண்டல செயலாளர் தமிழாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் உதயநிதி, பார்த்திபன், கண்ணன், சங்கர், பெருமாள், விக்னேஷ், மாரிமுத்து, அருண், பிரகாஷ், நாகராஜ், கமலம், ஜோதி, உமா மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக 8 ஆவது வார்டு கிளைச் செயலாளர் பிரபாகரன் நன்றி உரையாற்றினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி