ஸ்ரீரங்கம்: விஷமருந்தை சாப்பிட்ட முதியவர் உயிரிழப்பு

53பார்த்தது
ஸ்ரீரங்கம்: விஷமருந்தை சாப்பிட்ட முதியவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுக்கா சோமரசம்பேட்டையை சேர்ந்தவர் பெரியண்ணன் 75. இவருக்கு வயது முதிர்வு காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் மகன்களுக்கு செலவு வைத்துவிடக்கூடாது என கருதி கடந்த 10 ஆம் தேதி விஷமருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று (பிப்.23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் மகன் செந்தில்குமார் புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி