விசிக சார்பில் வெற்றி விழா அங்கீகார பேரணி

79பார்த்தது
விசிக விற்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து வெற்றி விழா அங்கீகார பேரணி கரூர் மாநகரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மத்திய நகர செயலாளர் முரளி (எ) பாலசிங்கம் தலைமை தாங்கினார். அடங்காத தமிழன் அருள் வரவேற்புரை ஆற்றினார். கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றலரசு, மேற்கு மாவட்ட பொருளாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் அப்துல் நாசர் கலந்து கொண்டார்.

பேரணியானது கரூர் லைட்அவுஸ் பெரியார் சிலையில் தொடங்கி ஜவஹர்பஜார் வழியாக வீரவணக்க கோஷங்களை எழுப்பியவாறு கரூர் மாநகராட்சி அலுவலகம் வரை சென்ற முடிவடைந்தது.

இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் மகாமுனி, உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் மணிமாறன், கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சாந்தி, செந்தாமரை, பொறியாளர் செந்தில்குமார், அரவை சுரேந்தர், ரவிநாத், ஜெயராமன், ரிபாய்தீன் ஹாசினி, ஷேக்பரீத், பசுவை ஆகாஷ், வஉசி டேவிட், மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார், விஜய், ஆண்டிபாளையம் பிரபு, கடவூர் ராமச்சந்திரன், ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி