என் மகள் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் நீதி வேண்டும். தாயார் பேட்டி.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, செம்பியநத்தத்தை சேர்ந்த பள்ளி மாணவி நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகாமையில் உள்ள திறந்தவெளி பகுதியில் இயற்கை அழைப்புக்காக சென்றார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மாணவியை பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ மற்றும் செய்திகள் வலைத்தளத்தில் வெளியானது.
இது தொடர்பாக கரூர் எஸ். பி. நேற்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் அந்த மாணவி மீது கூட்டு பாலியல் சம்பவம் நடைபெறவில்லை. இது போன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர்.
இதுகுறித்து மாணவியின் தாய் கூறுகையில், நேற்று முன்தினம் இரவு 7. 30 மணி அளவில் இயற்கை உபாதைக்கு சென்று வருவதாக கூறிய நிலையில் , பத்து நிமிடம் கழித்தும் மகளை காணவில்லை என தேடினேன். என்மகளை கற்பழித்து கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஓடி வந்ததாகவும், அவரது மகள் தவறிழைத்தவர்கள் தப்பி செல்கிறார்கள் என கை சைகையில் தெரிவித்ததாகவும், என் மகளுக்கு நடந்த கொடுமைக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என பேட்டி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் தாயார் அளித்த புகார்மனுவில் தனது மகள் பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.