கரூர்: கூடுதல் சேமிப்பு தானிய கிடங்கு அடிக்கல் நாட்டு விழா

80பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூபாய் 1.70 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் தானிய கிடங்கு காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் திமுக கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி