கபடி போட்டியில் முதலிடம் பெற்ற மேட்டுமகாதானபுரம் கபடி அணி

58பார்த்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டை விட்டுக்கட்டி பகுதியில் 5 ஆம் ஆண்டு மாபெரும் கபடி போட்டி பகல் இரவு 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் கரூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்று விளையாடின. 

இதில் மேட்டுமகாதானபுரம் கதிரவன் கபடி குழு முதல் பரிசையும், கோயமுத்தூர் விவேகானந்தா பல்கலைக்கழக மாணவர்கள் 2 ஆம் இடத்தையும், விட்டுக்கட்டி விகேடி பாய்ஸ் 3 ஆம் இடத்தையும், பிச்சம்பட்டி பி.வி.கே ஜூனியர் கபடி குழு 4 ஆம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி