தட்டச்சரை தாக்கிய பெண் துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்-பரபரப்பு

52பார்த்தது
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தட்டச்சராக பணிபுரிந்து வருபவர் சரவணன்.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட 920 மனுக்களையும் டைப் செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டிருந்தபோது, இன்றும் வேலையை முடிக்கவில்லையா? எனக்கூறி துணை வட்டார வளர்ச்சி பெண் அலுவலர் அன்புமணி ஒருமையில் பேசி கன்னத்தில் அறைந்து உள்ளார்.

இந்த தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய சங்கத்தினர் யூனியன் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினர் கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புமணி யூனியன் அலுவலகம் பின் வழியாக வெளியேறி காருக்குள் ஏறி செல்ல முயன்றபோது, அவரை தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய சங்கத்தினர் முற்றுகையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறியதால் இரு சங்கத்தினர் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.

மாயனூர் போலீசார் இருதரப்பையும் தடுத்து அமைதியாக கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனால் கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி