கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிவேல் மனைவி வயது 32. இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டிலிருந்த போது அங்கு வந்த இவரின் கொழுந்தனார் ஜெய் வர்மன் தனது பேண்ட் வீட்டில் இருப்பதை எடுத்து தர கேட்டுள்ளார். அதற்கு இங்கு இல்லை என கூறிய அண்ணியை தகாத வார்த்தையால் திட்டி கையைப் பிடித்து முறுக்கி தலைமுடியை பிடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயம் பட்ட அவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். அதனையடுத்து லாலாபேட்டை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை.