கட்டளை பிரிவு சாலையில் டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்து

58பார்த்தது
கட்டளை பிரிவு சாலையில் டூவீலர் மீது டிராக்டர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, உப்பிடமங்கலம், கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி வயது 41. இவர் பிப்ரவரி 16ம் தேதி இரவு 7:30 மணி அளவில், திருச்சி-கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். 

இவரது வாகனம் கட்டளை பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிர்த் திசையில் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, உள்வீரராக்கியம், ஜேஜே காலனி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் வயது 52 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிராக்டர், பொன்னுசாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பொன்னுசாமியை மீட்டு கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

சம்பவம் தொடர்பாக பொன்னுசாமியின் உறவினர் பிரசாந்த் வயது 34 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டிராக்டரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி