கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதானபுரம் ஊராட்சி 7, 8 , 9 வது வார்டு ஆதி திராவிடர் தெரு பொதுமக்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்படவில்லை. காலி குடங்களுடன்
அப்பகுதி பெண்கள் குடிநீர் ஆப்ரேட்டர் மீது புகார் தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து கலைந்து சென்றனர்.