
கரூர்: அறிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மேல விட்டுக் கட்டியை சேர்ந்தவர் சரவணன் (32). இவர் கடந்த 4 ஆம் தேதி சிந்தலவாடி பிரிவு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த நபர் ஆயுதத்தை காட்டி சரவணன் பாக்கெட்டில் இருந்த ரூ. 9000 பிடுங்கி மிரட்டல் விடுத்துள்ளார். அருகில் வருபவர்களைப் பார்த்துவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றுள்ளார். புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரானையை சேர்ந்த எட்வின் ராஜா என்பவர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்