’எம்புரான்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிதி நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.இந்த நிலையில், நடிகரும் எம்புரான் திரைப்பட இயக்குநருமான பிரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எம்புரான் திரைப்படத்தை இயக்கிய பிரித்விராஜ் அப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். எம்புரான் படத்தில் பணியாற்றியதற்காக பிரித்விராஜ் ரூ.40 கோடி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.