மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவர்

60பார்த்தது
மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவர்
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர்கள் நூருல்லா ஹைதர் (55) - அஸ்மா கான் (42) தம்பதி. நூருல்லா ஹைதருக்கு, தனது மனைவி திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல், நேற்றும் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கோபத்தின் உச்சிக்குச் சென்ற நூருல்லா ஹைதர், மனைவியின் தலையில் பலமுறை சுத்தியலால் அடித்துக் கொலை செய்திருக்கிறார். தொடர்ந்து போலீசிடம் சரணடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி