கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மணவாசி டோல் பிளாசா அருகே உள்ள தருண் பேக்கரியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் புகையிலை விற்ற பேக்கரி கேஷியர் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் 35 மற்றும் கடையை லீசுக்கு எடுத்த பசுபதிபாளையம் திண்ணப்ப நகரைச் சேர்ந்த சிவக்குமார் 52 ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 165 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.