பிரதமர் மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘மித்ர விபூஷணா’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருதுக்கு பின்னர் தமிழில் வணக்கம் என கூறி தனது பேச்சை அவர் தொடங்கினார். தொடர்ந்து ”செயற்கரிய யாவுள நட்பின்" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். கடினமான காலங்களில் கைகொடுக்கும் உற்ற தோழன் இலங்கை என கூறிய மோடி இரு நாடுகளின் உறவு நன்றாக உள்ளது என்றார்.