கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை திடீரென மழை பெய்ய தொடங்கியது. நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தோவாளை, பூதப்பாண்டி, செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மழையைத் தொடர்ந்து விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.