கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் நேற்று ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போலீசார வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது என விதிகளை மீறிய வாகனங்கள் மீது 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 3. 64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.