கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் கடுமையான முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நீதிமன்ற சாலையில் ஹோட்டல் ஒன்றின் முன்பு போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர். மேலும் வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.