தி. மு. க அரசின் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, நாகர்கோவில் மாநகர சாலைகளை சீரமைக்காமல் இருக்கும் மெத்தன போக்கை கண்டித்து அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தலைமையில் இன்று(அக். , 8) நாகர்கோவில் மாநகராட்சி வேப்ப மூடு சந்திப்பு காமராஜர் சிலை முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.