கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்தது. வடசேரி, பார்வதிபுரம், கிருஷ்ணன் கோவில், கோட்டாறு, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டது. மழையைத் தொடர்ந்து விவசாயிகளும் விவசாய பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.