கர்ம வீரர் காமராஜரின் 49வது நினைவு நாளையொட்டி இன்று (அக். 2) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்
முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், முன்னாள் பாடநூல் கழக தலைவர் எப். எம். ராஜரத்தினம் மற்றும் மாநில மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய , பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.