திருவட்டார்: கோயிலில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கபட்டன
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் முக்கியமானது திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவில் ஆகும். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தினமும் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குடும்பமாக வருகை தருகின்றனர். இந்த கோவிலை சுற்றித் கடந்த சில நாட்களாக அந்த பகுதியை சேர்ந்த தெரு நாய்கள் கூட்டமாக சுற்றி வருவது வழக்கம். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது. சுற்றி தெரியும் நாய்களைப் பிடித்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் திருவட்டாறு பேரூராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருவட்டாறு பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் நடவடிக்கையின் காரணமாக நாகர்கோவில் தொண்டு நிறுவனம் மூலம் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த 20 தெரு நாய்கள் கூண்டு வண்டி மூலம் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் கோயிலுக்கு பக்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.