தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கை வெளியிடப்பட்டது. அதில் இருமொழிக்கொள்கை பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. தாய் மொழியான தமிழ், உலகத்திற்க்கான இணைப்பு மொழியான ஆங்கிலம் என இருமொழிக்கொள்கையை தமிழக வெற்றிக் கழகம் பின்பற்றுகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழே ஆட்சி மொழி, தமிழே வழக்காடு மொழி, தமிழே வழிபாட்டு மொழி எனவும் தமிழ்வழி கல்விக்கு அரசு வேளையில் முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.