தவெக முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியபோது, “பாம்பு தான் அரசியல்; பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பது தான் நம்முடைய நம்பிக்கை; கவனமாக களமாட வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை கோட்பாட்டில் எந்தச் சமரசமும் இல்லை. நமது கொள்கை தலைவராக பச்சை தமிழர் காமராஜரை ஏற்கிறோம். ஏனெனில் அவர் மதசார்பின்மை மற்றும் நேர்மையான ஆட்சிக்கு முன் உதாரணமாக இருந்தவர்” என கூறியுள்ளார்.