குளச்சல் - Kulachal

கிள்ளியூர்: பேரிடர் பகுதிகளை மாவட்ட பார்வையிட்ட ஆட்சியர்

கிள்ளியூர்: பேரிடர் பகுதிகளை மாவட்ட பார்வையிட்ட ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக பருவமழை மற்றும் பேரிடர் வாயிலாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகள், அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகள் என பல இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் பேச்சிப்பாறை அணையிலிருந்து  திறந்துவிடப்படும் உபரிநீர் தாமிரபரணி ஆறு குழித்துறை வழியாக கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட வைக்கலூர் பகுதி வழியாக கடலில் கலக்கிறது. இனிவரும் பருவமழை காலங்களில் இப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு சுவர், ஆற்றின் கரைப்பகுதிகள் வலுவாக உள்ளதா என கலெக்டர் அழகு மீனா பார்வையிட்டார்.   மேலும் மங்காடு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் வெள்ளத்தில் மூழ்கி அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இனிவரும் பருவமழையின் போது இப்பகுதியில் அதிகளவு பாதிப்புகள் ஏற்படாது இருக்க ஆற்றின் கரைப்பகுதிகளில் புதர்களை அகற்றி, கரையினை பலப்படுத்திடவும், வெள்ளத்தின் அளவினை அவ்வப்போது கண்காணித்து, வெள்ளம் ஊருக்குள் புகாத வண்ணம் தற்காத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా