களியக்காவிளை: சிவ பார்வதி கோயிலில் நவராத்திரி விழா

64பார்த்தது
களியக்காவிளை: சிவ பார்வதி கோயிலில் நவராத்திரி விழா
களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை பகுதியில் செங்கல் கிராம ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற சிவ பார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நவராத்திரி விழாவினை சுவாமி மகேஸ்வரானந்தா சரஸ்வதி திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து ஒன்பது இரவுகளும் பத்து பகல்களும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாவின் கடைசி மூன்று நாட்கள் துர்காஷ்டமி, மகாநவமி மற்றும் விஜயதசமி என்று அழைக்கப்படும் மிக முக்கியமான சங்கல்ப பூஜைகள் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி