தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவது இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இந்த போராட்டம் நடைபெற்றது.
புதுக்கடை பேருந்து நிலையத்தில் முஞ்சிறை ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த போராட்டத்துக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜீன்ஸ் தலைமை வகித்தார். புதுக்கடை பேரூர் கழக செயலாளர் ரமேஷ் முன்னிலையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். முன்னாள் புதுக்கடை பேரூர் கழக செயலாளர் வெற்றிவேந்தன் நன்றியுரை கூறினார்.