புதுக்கடை அருகே விளாத்துறை ஊராட்சிக்குட்பட்ட ஐரேனிபுரம் ஊரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் றசல்ராஜ். இவருக்கு சொந்தமான 5 சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த இடத்தில் பஞ்சாயத்து அனுமதி பெற்று வீடு கட்டி வந்தார். ஆனால் சம்மந்த பட்ட பஞ்சாயத்து தலைவர் அனுமதியை ரத்து செய்தார்.
எனவே ஆசிரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கில் சம்மந்தபட்ட இடம் ரசல்ராஜிக்கு சொந்தமான பட்டா இடம் என தீர்ப்பு வழங்கியது. எனினும் பஞ்சாயத்தில் இருந்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கிலும் அந்த இடம் றசல்ராஜிக்கு உரிமை பட்ட இடம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே இந்த இடம் புறம்போக்கு இடம் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியரும் சான்றிதழ் அளித்துள்ளார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த சிலர் இந்த இடம் பொது சந்தைக்குரிய இடம் என்று நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் றசல் ராஜ் அந்த இடத்தில் வீடு போடுவதற்கு இன்று ( 8-ம் தேதி) நீதிமன்றம் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு உடன் பணி தொடங்கபட்டது. புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.