பிரபல ஹாலிவுட் நடிகை மின்னி டிரைவர், ஆர்.ஆர்.ஆர் படத்தை பாராட்டி பேசியுள்ளார். 'ஆர்.ஆர்.ஆர் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. இதை 3 மாதங்களுக்கு ஒரு முறை என் மகனுடன் பார்ப்பேன். என் மகனுடன் படத்தை பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா காலத்திலும் எங்களுக்கு பிடித்த படம் இது. இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் மிக அழகான படங்களில் இதுவும் ஒன்று என்று நான் நினைக்கிறேன்' என்றார்.