குளச்சல் - Kulachal

கருங்கல்: சொத்து தகராறு - அண்ணனை தாக்கிய ரவுடி

கருங்கல்: சொத்து தகராறு - அண்ணனை தாக்கிய ரவுடி

கருங்கல் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மகன் வினோ ராஜ் (42). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இவருக்கும் அவரது சகோதரர் மனோ ராஜ் (40) என்பவருக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.  இந்நிலையில் நேற்று வினோராஜ் வீட்டருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மனோ ராஜ் தகாத வார்த்தைகள் பேசி வினோ ராஜைத் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, மனோ ராஜைக் கைது செய்தனர். இவர் மீது கருங்கல் போலீசில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் ரவுடிப் பட்டியலில் இவருடைய பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా