தமிழ்நாட்டில் மத்திய பாஜக அரசு மும்மொழிக்கொள்கையை திணிக்க முயலுவதாக கூறி திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் இதை எதிர்த்து திமுகவை சேர்ந்த பெண்கள் கோலமிட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அயப்பாக்கத்தில் 2 கி.மீ தூரம் இந்தி திணிப்பை எதிர்த்து திமுக மகளிர் குழுவினர் தங்கள் வீடுகளில் கோலமிட்டுள்ளனர்.