பள்ளிகளில் மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வரும் நிலையில்,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும், பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் உடனடியாக, பள்ளிக் கல்வித் துறைக்குத் திறமையான, குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட வேறு ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.