ஆரோக்கியமான நபர்களை இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதித்தால் இரண்டு வாரங்களில் குணமாகிவிடும். ஆனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த வைரஸ் சில சிக்கல்களை உருவாக்கலாம். நுரையீரல் அழற்சி, இதயப் பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்சி, கடுமையான சுவாச பாதிப்பு, ஆஸ்துமா, காதுகளில் நோய்த் தொற்றுகள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்கள் நிமோனியாவால் கடும் சிக்கல்களை அனுபவிக்கலாம்.