குழித்துறை: நகராட்சி அலுவலகத்தில் இந்து முன்னணி முற்றுகை

77பார்த்தது
குழித்துறை: நகராட்சி அலுவலகத்தில் இந்து முன்னணி முற்றுகை
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறுவதால் 12- சிவாலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் சாலை வசதி, தெரு விளக்கு வசதி , போக்குவரத்து வசதி, பாதுகாப்பு வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி ஆகியவை செய்து கொடுக்க வேண்டுமென இந்து அமைப்புகள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதோடு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை எனவும் அதனை உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் எனவும் குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு , குழித்துறை நகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் இன்று 17-ம் தேதி நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு நகரத் தலைவர் வினு குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விமல் ராஜ் முன்னிலை வகித்தார். மேலும் போராட்டத்தில் குழித்துறை நகர பாஜக தலைவர் சுமன், மாவட்ட கவுன்சிலர் ராஜேஷ் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி