ரிசர்வ் வங்கி, இந்திய பொருளாதாரம் சார்ந்த நிதி தரவுகளுக்கான தொகுப்புகளை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதற்காக 'RBIDATA' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இந்திய பொருளாதாரம் தொடர்பான 11,000-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல் தொகுப்புகளை பெற முடியும். RBIDATA செயலி பயனர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து 20 கிலோமீட்டருக்குள் உள்ள வங்கிகள் மற்றும் அதன் சேவைகளையும் அறியவும் உதவுகிறது.