சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் அருகே மனைவி தவமணி, குழந்தைகள் வித்யா தாரணி (13), அருள் பிரகாஷ் (5) ஆகியோரை அசோக் குமார் அரிவாளால் வெட்டியதில் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர். தவமணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான அசோக் குமாரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.