புதுக்கடை: குடும்பத்துடன் கொலை மிரட்டல் - பெண் புகார்
புதுக்கடை அருகே தேங்காப் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் அஜின். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சஜிதா (27). இவர் தனது குழந்தைகளுடன் மார்த்தாண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் வந்து புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: - நான், எனது கணவர், மாமனார் மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக வசித்து வருகிறேன். எங்கள் பகுதியை சேர்ந்தவரும், புதுக்கடை ஸ்டேஷனில் பல்வேறு வடக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடி மற்றும் சிலர் சேர்ந்து எனது கணவரை தடுத்து நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டிய புகாரில் புதுக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி எனது மாமனாரை தாக்கி காயப்படுத்தினார். இதை அடுத்து எனது பிள்ளைகளை நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டு வந்தபோது அந்த ரவுடி வீட்டு அருகாமையில் வைத்து கையில் வெட்டு கத்தியுடன் வந்து என்னையும் எனது பிள்ளைகளையும், என்னை குடும்பத்துடன் கொன்று விடுவதாக மிரட்டினார். இது தொடர்பாக நாங்கள் புதுக்கடை ஸ்டேஷனில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே தாங்கள் இந்த மனுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.