பாம்புகள் எதிர்பாராத நேரங்களில் காய்கறிகளை கடித்துவிடும் சூழல் ஏற்படலாம். காய்கறியோ, பழங்களோ அது பாதி தின்றது போல அதைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் வௌவால்கள் தான் பொதுவாக இதுபோல செய்யும். ஆனால் பாம்பின் விஷம் என்பது நமது ரத்த ஓட்டத்தில் கலந்தால் மட்டுமே பிரச்சினை ஏற்படும். அதாவது பாம்பு விஷத்தைக் குடித்தால் கூட அது ஜீரணமாகிவிடும். ஆனால், நமது வாய், தொண்டையில் புண், வயிற்றில் அல்சர் இருந்தால் அதன் வழியாகப் பாம்பின் விஷம் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து உள்ளது.