கிள்ளியூர் - Killiyur

ராமன்துறையில் மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் தாது மணல் பிரித்தெடுக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த போவதாக தகவல் வெளியானது. இதை அடுத்து மீனவர்கள் இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், மனவளக்குறிச்சியில் இயங்கி வரும் அரிய வகை மணல் ஆலையை  மூட வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலுவிறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.         இந்த நிலையில் நேற்று தேங்காப்பட்டணம் அருகே ராமன் துறை கடற்கரை பகுதி மீனவ மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு ராமன் துறை பங்கு பணியாளர் சகாய வில்சன்  தலைமை வகித்தார். மற்றும் திருத்தொண்டர் சஜின், பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறுவர்கள் சிறுமியர் உட்பட ஏராளமானவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.         போராட்டத்தில் தாது மணல் பிரித்தெடுப்பதால் அந்தப் பகுதியில் உயிர் கொல்லி நோயான கேன்சர் உட்பட பல்வேறு நோய்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுவட்டார பகுதியில் உள்ள தென்னை மரங்கள் உட்பட அனைத்து தாவரங்களும் அழிந்து விடும் எனவும்,   சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிக்கப்படும் எனவும் பொது மக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా