திருவட்டாறு: ஆதிகேசவ பெருமாள் கோவிலில் விழா துவங்கியது

68பார்த்தது
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற பெருமாள் கோவிலில் மிகவும் முக்கியமானது திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மற்றும் பங்குனி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா இன்று (31-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் தொடர்ந்து கோவில் தந்திரிகள் சஜித் சங்கரநாராயணரு, கோகுல் நாராயணரு ஆகியோர் இனைந்து சாமிக்கு பூஜை செய்து கொடியேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளாமான பக்தர்களும் கலந்துக் கொண்டனர். இரவில் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது. 10 ம் நாள் திருவிழாவில் திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சுவாமிஎழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி