தேங்காபட்டணம்: ராட்சத அலையால் சேதம் குறித்த வீடியோ வெளியானது

75பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கடலோர கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதில் குறிப்பாக தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு உட்பட்ட இரையுமன்துறை பகுதியில் கடலின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த அலை தடுப்பூச்சுவர் மற்றும் துறைமுக நுழைவு  பகுதி போன்றவை கடலில் அடித்து செல்லப்பட்டு துறைமுக பாதையில் கடும் சேதம் ஏற்பட்டது.   தற்போது சுமார் 224 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தன.
      இந்த பணிகள் அனைத்தும் அலையால் சேதமடைந்து,   பெரிய பாறாங்கற்கள் மற்றும் கோர் லாக் கட்டைகள் அனைத்தும் கடலில் அடித்து செல்லப்பட்டன.   சம்பவ இடத்தை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா சென்று பார்வையிட்டார். இதற்கிடையில் கடல் அலை சீற்றம் காரணமாக பாலம் சேதம் அடைந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி