செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ஆம் ஆண்டு விழா கூட்டம் மட்டுமே நடைபெற உள்ளதாகவும், அதற்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகி எம். எஸ். பாலாஜி தலைமையில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், 2000 முதல் 3000 நபர்கள் வரை பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.