செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் 12வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் புதியதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காட்டாங்குளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கிய சில நாட்களில் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் விஜயலட்சுமி இவரது கணவர் துரைபாபு தற்போது 12வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க பணிகள் தொடங்கிய நிலையில் தற்போழுது அதனை நிறுத்த கோரியும் அங்கு பந்தல் அமைப்பதாக கூறி அங்கு வேலை செய்யும் ஆட்களிடம் தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி பணியை நிறுத்தியுள்ளார். மேலும் 500 மீட்டர் தொலைவில் கட்டண குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இது எதற்காக என்று கத்திக் கொண்டே கூச்சலிட்டார். பின்பு தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் காவல்துறையினர் இருவரிடமும் சமரசம் பேசினர்.